×

கைகளால் நடந்து சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிள்-விழுப்புரம் ஆட்சியர் நடவடிக்கை

விழுப்புரம் :  விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவந்தாடு, பூவரசன்குப்பம், ராம்பாக்கம் ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ஆய்வுப்பணிகளை ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சிறுவந்தாடு ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். ஆய்வு பணிகளை முடித்துவிட்டு அக்கிராமம் வழியாக வந்த போது, மாற்றுத்திறனாளி பெண் திலகவதி 2 கால்களையும் இழந்து, கைகளால் சென்றதை பார்த்த ஆட்சியர் உடனே காரை நிறுத்த சொன்னார்.கீழே இறங்கி திலகவதியிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, மூன்று சக்கர சைக்கிள் கேட்டு விண்ணப்பித்து இதுவரை வழங்கவில்லை என்று தெரிவித்தார். உடனே, ஆட்சியர் மாற்றுத்திறனாளி நல அலுவலரை தொடர்பு கொண்டு வாடகை வாகனம் மூலம் ஒரு மணி நேரத்துக்குள் மூன்று சக்கர சைக்கிளை திலகவதிக்கு வழங்கினார். தொடர்ந்து, அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும், எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். ஆட்சியரின் செயல்பாட்டை பார்த்த பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்….

The post கைகளால் நடந்து சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிள்-விழுப்புரம் ஆட்சியர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Kandamangalam Urad Union ,Viluppuram District Kandamangalam ,Rambakkam ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...